FaMe TN தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSMEs) வலுப்படுத்துவதற்கு நோக்கமாக கொண்ட அமைப்பாகும். இந்த நிறுவனம், வர்த்தகம், முதலீடு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவித்து MSME களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தொழில்நுட்பம், நிதி மற்றும் மேலாண்மை தொடர்பான சவால்களை சமாளிக்க உதவுவதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் MSME களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. FaMe TN, அரசு செயல்முறைகள் எளிதாக நடைபெற உதவும் ஒருங்கிணைப்பாளராக (Facilitator) இருந்து, MSME களுக்கு தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் தகுந்த காலக்கெடுவில் கிடைக்க உறுதி செய்கிறது. இதன் முன்னெடுப்புகள் வாயிலாக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தி, MSME சூழலை வலுப்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியமான இடத்தைப் பெற உதவுகிறது.

FaMe TN, தமிழ்நாட்டிலுள்ள MSME களுக்கு தொழில்நுட்பம், நிதி மற்றும் மேலாண்மை தொடர்பான சவால்களுக்கு தீர்வுகளை வழங்கி, அவை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வளர்ச்சி பெற்று விரிவடைய உதவுகிறது.
இந்த நிறுவனம் MSME களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து, அவற்றை சர்வதேச சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதியை ஊக்குவித்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
FaMe TN, அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் செயல்முறைகளை எளிமைப்படுத்தி, முதலீடு மற்றும் தொழில் விரிவாக்க நடவடிக்கைகளில் MSME களுக்கு சீரான மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது.
FaMe TN, MSME களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய சேவைகளை வழங்குகிறது. வர்த்தகத்தை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், ஆய்வுகலை வெளியிடுதல் தொழில் ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான ஒரே தொடர்பு மையமாக (Single Point of Contact) செயல்படுதல் இந்த சேவைகள் மூலம், MSME களுக்கு தடையற்ற ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழல் உருவாக்கப்படுகிறது.

