image of unknown image

FaMeTN

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் மாநில மைய முகமை. (State Nodal Agency)

தமிழ்நாட்டில் RAMP திட்டத்தின் சுருக்கமான மேலோட்டம்

RAMP (Raising and Accelerating MSME Performance) திட்டம் என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை (MSMEs) வலுப்படுத்துவதற்காக, உலக வங்கியின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு திட்டமாகும். இது குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (MSMEs) வலுப்படுத்தவும் மறுமலர்ச்சி/புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு முக்கிய குறிக்கோள்களை உள்ளடக்கியது, i. MSME நிறுவனங்கள் மற்றும் அதன் மேலாண்மையை வலுப்படுத்துவது, மற்றும் ii.சந்தை அணுகல், தொழில் திறன் வளர்ச்சி மற்றும் நிதிசார் தேவைகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது. இதனை செயல்படுத்த மாநிலத்திற்கான செயல் திட்ட வடிவம் “Strategic Implementation Plan (SIP)”தயாரிக்கப்பட்டது.

இந்த SIP‑இன் ஒரு பகுதியாக மொத்தம் 20 திட்டங்கள் முன்மொழியப்பட்டன, அதில் 10 திட்டங்கள், ஒன்றிய அமைச்சகத்தின் SIPEC குழுவால் அங்கீகரிக்கப்பட்டன. இந்த 10 திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத்தொகை ரூ.195.80 கோடி ஆகும், இதில் ரூ.164.10 கோடி RAMP திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.31.70 கோடி தொகையை மாநில அரசு வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் Digital MSME Facilitation Services, Industry Transformation Maps, Zero Defect Zero Effect (ZED), Intellectual Property Rights உதவி, Incubation, TReDS, Food Processing மற்றும் Coir துறைகளுக்கான Sector Transformation திட்டங்கள், Reverse Buyer Seller Meet(RBSM) மற்றும் Vendor Development Programmes (VDP) ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்களை செயல்படுத்த FaMeTN மாநில மைய முகமை (State Nodal Agency (SNA)) ஆக நியமிக்கப்பட்டுள்ளது.

image of unknown image

தமிழ்நாடு MSME நிறுவனங்களை வலுப்படுத்துதல்

RAMP திட்டம், தமிழ்நாட்டில் உள்ள MSME நிறுவனங்களுக்கு பெரும்பலன் அளிக்கக்கூடியது. முக்கியமாக, தொழில்களுக்கு டிஜிட்டல் சேவைகளை எளிதாகப்பெறுதல், சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், நிதிசார் தேவைகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் தொழில் நிறுவனங்களின் வியாபார போட்டித் திறனை உயர்த்துகிறது.

டிஜிட்டல்மயமாக்குதல்,ஒருங்கிணைந்த தொழில்தரவுத்தளத்தை உருவாக்குவதோடு அரசு சேவைகளை உரிய முறையில் MSME நிறுவனங்களை சென்றடைய உதவுகிற அதே வேளையில் குறிப்பிட்ட வர்த்தகத் துறைக்கான உருமாற்ற வளர்ச்சி திட்டங்கள் (Sector-Transformation) உணவு பதப்படுத்துதல் மற்றும் கயிறு போன்ற துறைகளை நவீனப்படுத்தும்.

மேலும், ZED சான்றிதழ் வழங்குவது, IPR விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் தொழில் வளர் காப்பகங்களை உருவாக்குவது, மாநிலத்தில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம்,புதுமை மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை மேம்படுத்தும்.

RAMP திட்டத்தின் படி, எடுக்கப்படும் முன்னெடுப்புகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் MSME நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் மற்றும் MSME- களின் நிலையான வளர்ச்சிக்கும் உதவி செய்வதோடு, தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது

image of unknown image