இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
இந்திய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி
MSME நிறுவனங்களில் முழுமையான எரிசக்தி திறன் முதலீடுகளுக்கான நிதி உதவி (4E Financing Scheme)
இந்த திட்டத்தின் மூலம் MSME நிறுவனங்கள் எரிசக்தி சேமிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க நிதி உதவி பெறலாம்.
நோக்கம்
இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் (MSMEs) ஆற்றல் சேமிப்பை (Energy saving) ஊக்குவித்தல். நிதி தயாரிப்புகளை (Financial products) அறிமுகப்படுத்துவதன் மூலம் உமிழ்வுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல், மேலும் பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்பதற்காகப் பசுமை இல்ல வாயுக்கள், குறிப்பாகக் கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வை ஒழித்தல்/குறைத்தல். புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டங்களின் உருவாக்கம், மேம்பாடு, செயல்விளக்கம் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றை நோக்கி MSME-களுக்கு ஆதரவளித்தல்.
முக்கிய பலன்கள்
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு, குறைந்தபட்ச கடன் தொகையாக ₹10 லட்சமும், அதிகபட்ச கடன் தொகையாக ₹150 லட்சத்திற்கு மிகாமலும், திட்ட மதிப்பீட்டில் 90% வரை கடன் வழங்கப்படும்.
தொடக்கக்கால தவணை சலுகை காலம் (Moratorium period) 6 மாதங்கள் உட்பட, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ₹50 லட்சம் வரையிலான கடன்களுக்கு 36 மாதங்களுக்கு மிகாமலும், ₹50 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு 60 மாதங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதி அளவுகோல்கள்
உற்பத்தி அல்லது சேவைத் துறையைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள்.
விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்
கடந்த இரண்டு வருட செயல்பாட்டில் ரொக்க லாபம் (Cash profit) ஈட்டியிருக்க வேண்டும், மேலும் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கும் (FI) கடன் நிலுவை/நிலுவைத் தவணை (Default) வைத்திருக்கக் கூடாது.
திட்ட முன்மொழிவு C1 முதல் C8 (C1-C8) வரையிலான வரம்பிற்குள் இருக்க வேண்டும்.