இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
இந்திய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி
உதிக்கும் நட்சத்திரங்களின் திட்டத்தின் (USP) கீழ் ஏற்றுமதி நோக்கமுள்ள MSME நிறுவனங்களுக்கு SIDBI உதவி
தானியங்கு இயந்திரங்கள்,தொழில்நுட்பம் & சேவைகள், மருத்துவம் போன்ற துறைகளில் செயல்படும் தொழில்களுக்கு ஏற்றுமதி வளர்ச்சிக்கான நிதி மற்றும் ஆதரவு வழங்கப்படும்.
நோக்கம்
தானியங்கு இயந்திரங்கள்,தொழில்நுட்பம் & தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மருத்துவம் போன்ற உயர்ந்த வளர்ச்சி வாய்ப்பு கொண்ட துறைகளில் உள்ள எதிர்கால ஏற்றுமதி முன்னணி நிறுவனங்களை ஆதரிப்பது.
முக்கிய பலன்கள்
ஏற்றுமதி சார்ந்த குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்(MSME)நிறுவனங்கள் தங்களை நவீனமயமாக்குவதற்கும், புதிய தயாரிப்புகளாக பல்வகைப்படுத்துவதற்கும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆராய்ச்சி & மேம்பாடு (Product R&D) போன்றவற்றுக்குமான நிதியுதவி.
திட்ட மதிப்பீட்டில் 80% வரை நிதியுதவி (EXIM வங்கியுடனான கூட்டு நிதியுதவியும் (Joint financing) கிடைக்கும்).
MCLR-உடன் இணைக்கப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
வழிகாட்டுதல் ஆதரவு (Mentorship support), பங்கு மூலதன ஆதரவு (Equity support) போன்றவற்றுக்கான தொழில்நுட்ப உதவி.
செயல்திறன் அல்லது இலக்கு மைல்கற்களை எட்டுவதன் அடிப்படையில் 25 அடிப்படை புள்ளிகள் (bps) வரை வட்டி சலுகை (Interest incentive).
தவணைக்கடன் (TL) அல்லது வெளிநாட்டு நாணய தவணைக்கடன் (Foreign Currency TL) வசதி கிடைக்கும்.
தகுதி அளவுகோல்கள்
புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு, அதே போன்ற வணிகத் துறையில் அனுபவமுள்ள ஊக்குவிப்பாளர்களுக்கு (Promoters) முன்னுரிமை வழங்கப்படும்.
ற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் / அடிப்படை ரீதியாக வலுவான, ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை.
சர்வதேச சந்தைகளுக்கான உத்திசார்ந்த சந்தை நுழைவுத் திட்டத்தைக் (Strategic market entry plan) கொண்டுள்ள சிறு மற்றும் நடுத்தர MSME நிறுவனங்கள்.
வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு (FIs) எந்தவொரு கடன் நிலுவையும் (Defaults) வைத்திருக்கக் கூடாது.