->
விண்ணப்பிக்கவும்
இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
இந்திய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி

SIDBI புதிய நிறுவனங்களில் மூலதன சொத்துக்களை வாங்குவதற்கான கருப்பொருள் உதவி (STHAPAN)

புதிய தொழில் நிறுவனங்கள் தொழிலை தொடங்க தேவையான மூலதன சொத்துகளை (Capital Assets) வாங்க இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சம் ₹20 கோடி வரை கடன் பெறலாம்.

நோக்கம்
  • புதிய தொழில் நிறுவனங்கள் (Greenfield Units) புதிய செயல்பாடுகளை அமைக்க நிலம் வாங்குதல், தொழிற்சாலை கட்டிடம் அமைத்தல், மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்குவது.
முக்கிய பலன்கள்
  • நிலம் வாங்குதல் மற்றும் தொழிற்சாலைக் கட்டடம் கட்டுதல், இயந்திரங்கள் (Plant & machinery) வாங்குதல், இதர நிலையான சொத்துக்கள், சூரிய மின்சக்தி (Rooftop solar) திட்டங்களை நிறுவுதல் மற்றும் பிற ஆற்றல் திறன் சாதனங்களை வாங்குதல் போன்றவற்றுக்கான கடன் உதவி.
  • புதிய நிறுவனங்கள் / புத்தம் புதிய திட்டங்களை (Greenfield projects) அமைப்பதற்கான நிதியுதவி.
  • திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 75% வரை, ரூ. 50 கோடி வரம்பிற்கு உட்பட்டு நிதியுதவி வழங்கப்படும்.
  • பயனாளியின் பங்களிப்பு (Promoters Contribution) - குறைந்தபட்சம் 25%.
  • MCLR-உடன் இணைக்கப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
  • 2 ஆண்டுகள் வரையிலான தொடக்கக்கால தவணை சலுகை காலத்துடன் (Moratorium) சேர்த்து, 7 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்.
தகுதி அளவுகோல்கள்
  • இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற புதிய நிறுவனங்கள் / புத்தம் புதிய திட்டங்கள் (Greenfield units) தகுதி உடையவை ஆகும்.
  • ரூ. 20 கோடிக்கு மேல் கடன் பெற, அதே போன்ற வணிகத் துறையில் ஊக்குவிப்பாளருக்கு (Promoter) 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்
  • ரூ. 20 கோடி வரை கடன் பெற, அதே போன்ற வணிகத் துறையில் ஊக்குவிப்பாளருக்கு 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு (FIs) எந்தவொரு கடன் நிலுவையும் (Defaults) வைத்திருக்கக் கூடாது.
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்