->
விண்ணப்பிக்கவும்
இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
இந்திய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி

நடைமுறை மூலதன ரொக்கக்கடன் (Cash Credit)

உங்கள் தொழிலுக்கு தேவையான நடைமுறை மூலதனம் (Working Capital) பெற இந்த கடன் உதவுகிறது. விரைவான அனுமதி மற்றும் MSME நிறுவனங்களுக்கு வசதியான Drawing Power வாயிலாக நிதியை பயன்படுத்தலாம்.

நோக்கம்
  • ஏற்கனவே செயல்பட்டு வரும் MSME நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதனம் நிதி (Working Capital) உதவி வழங்குவது.
முக்கிய பலன்கள்
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களின் நடைமுறை மூலதனத் தேவைகளுக்கான (Working capital requirements) நடைமுறை மூலதன உதவி.
  • பல்வேறு வங்கிகளில் இருந்து (IDBI/CUB/Yes Bank) தங்களுக்குத் தேவையான வங்கித் தளத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி.
  • பணம் எடுக்கும் வரம்பை (Drawing Power) நிர்ணயிப்பதில், வாடிக்கையாளரின் விருப்பப்படி தடையற்ற மற்றும் சுலபமான அனுமதி (Seamless approval).
  • காலக்கடன் (Term loan) பெறும் வாடிக்கையாளர்கள், நடைமுறை மூலதன வசதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான ஒற்றைச் சாளர (Single window) முறை.
  • MCLR-உடன் இணைக்கப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி விகிதம்.
தகுதி அளவுகோல்கள்
  • வேறு எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலிருந்தும் நடைமுறை மூலதன (Working capital) வசதியைப் பெறாத புதிய மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தகுதியானவை.
  • காலக்கடன் (Term loan) மாற்றத்தின் ஒரு பகுதியாக, நடைமுறை மூலதனக் கணக்குகளை மாற்றுவது (Takeover) தரநிலை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படலாம்.
  • வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு (FIs) எந்தவொரு கடன் நிலுவையும் (Defaults) வைத்திருக்கக் கூடாது."
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்