தேதி: 13 February 2026
இடம்: சென்னை
வகை: விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP)
விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு(VDP) 13 பிப்ரவரி 2026 அன்று சென்னையில் நடைபெற்றது. FaMeTN ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களை தமிழக மற்றும் இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஆகிய தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்(TNPL), தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி கழகம்(TNLDC), IRCON, சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Authority), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்(Bharath Dynamic Limited) மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) போன்றவற்றின் விநியோகஸ்தர்களாக உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில், மேற்கண்ட நிறுவனங்களில் விற்பனையாளர் பதிவு செயல்முறை மற்றும் கொள்முதல் தேவைகள் குறித்த தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
* மொத்த MSME-கள் பங்கேற்பு: 143 * மொத்த PSUs பங்கேற்பு: 06 இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு(VDP), MSME–PSU இணைப்புகளை வலுப்படுத்தி, அந்நிறுவனங்களின் கொள்முதல் செயல்முறைகளில் MSME-கள் அதிக அளவில் பங்கேற்க உதவும் வலுவான தளமாக அமைந்தது.











