image of unknown image

மதுரை - நவம்பர் 2025

தேதி: 23 November 2025

இடம்: மதுரை

வகை: விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP)


நிகழ்வு பற்றி

விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP) 28 நவம்பர் 2025 அன்று மதுரையில் உள்ள மடிட்சியா அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. FaMeTN ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களை இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஆகிய இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), Ordnance Factory, கூடங்குளம் அணுமின் நிலையம் (KKNPP), NLC TPL மற்றும் வ.உ.சி.துறைமுக ஆணையம் (VOC Port Trust) போன்றவற்றின் விநியோகஸ்தர்களாக உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில், மேற்கண்ட நிறுவனங்களில் விற்பனையாளர் பதிவு செயல்முறை மற்றும் கொள்முதல் தேவைகள் குறித்த தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும், வான்(Aero), பாதுகாப்புத் துறை (Defence), கடல்சார் (Marine) மற்றும் மின்சாரத் துறை (Power) போன்ற முக்கிய துறைகளில் MSME-கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி விவரங்கள்

• மொத்த MSME-கள் பங்கேற்பு: 150 • மொத்த PSUs பங்கேற்பு: 05 இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP), MSME–PSU இணைப்புகளை வலுப்படுத்தி, அந்நிறுவனங்களின் கொள்முதல் செயல்முறைகளில் MSME-கள் அதிக அளவில் பங்கேற்க உதவும் வலுவான தளமாக அமைந்தது.

நிகழ்வு புகைப்படங்கள்

image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View