தேதி: 25 September 2025
இடம்: சிவகங்கை
வகை: அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR)
25.09.2025 அன்று, சிவகங்கை மாவட்டம், மாவட்ட தொழில் மையத்தில் மண்டபத்தில் “அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR) குறித்த விழிப்புணர்வு உருவாக்கும் பயிலரங்கு” நடைபெற்றது. இந்நிகழ்வு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (IED), தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் நிறுவனம் (NiMSME), ஹைதராபாத் அவர்களோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
• காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, வணிக உத்திகள் உள்ளிட்ட அறிவுசார் சொத்து வகைகளை அறிமுகப்படுத்துதல். • பதிவு மற்றும் உரிமைகள் நடைமுறைப்படுத்துதல் குறித்த சட்ட விதிமுறைகளை விளக்குதல். • புதுமை, தொழில் வளர்ச்சி மற்றும் படைப்பாற்றல் துறைகளில் IPR-ன் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்தல். • IPR தொடர்பான வழக்குகளை (real-life disputes) மாதிரியாகக்கொண்டு கலந்துரையாடல்களை ஊக்குவித்தல்.









