image of unknown image

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதியிடல் & சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேதி: 27 June 2025 முதல் 10 October 2025

இடம்: பல்வேறு இடங்கள்

வகை: பொதியிடல்


நிகழ்வு பற்றி

இந்த நிகழ்ச்சிகளின் முதன்மை நோக்கம், MSME தொழில்முனைவோர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதியிடல் (Eco-friendly Packaging), சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். புதுமையான பொதியிடல் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தயாரிப்பின் கவர்ச்சியை உயர்த்துவது, வர்த்தக அடையாளத்தின் மதிப்பை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வெற்றிகரமாக நுழைய உதவுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பொதியிடல் என்பது பொருட்களை பாதுகாப்பாகவும் குறைந்த செலவில் நுகர்வோரிடம் சேர்க்கும் முக்கிய செயல்முறையாகும். இது பொருட்களை சேமித்து வைத்தல், விநியோகம், விற்பனை மற்றும் இறுதி பயன்பாடு வரை பொருட்களை பாதுகாக்க அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. தயாரிப்புகளின் பாதுகாப்பு மட்டுமின்றி , பொதியிடல் இன்று ஒரு முக்கியமான சந்தைப்படுத்தல் கருவியாக வளர்ந்து, வர்த்தக அடையாள வேறுபாட்டை உருவாக்கும் காட்சிப் பிரதிநிதியாக செயல்படுகிறது. நவீன பொதியிடல் செயல்முறைகள் அதிக அறிவியல் சார்ந்ததும் நிலைத்தன்மை (Sustainability) நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தயாரிப்புகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவதோடு, வடிவம், அளவு மற்றும் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.. நிலைத்த மற்றும் திறன் வாய்ந்த பொதியிடலின் நன்மைகள்: தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறது இழப்பு மற்றும் சேதத்தை குறைக்கிறது வர்த்தக அடையாளப்படுத்துவதை முன்னிலை படுத்தல் மற்றும் சந்தை விரிவாக்கத்தை மேம்படுத்துகிறது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழலியல் சமநிலையை ஆதரிக்கிறது

நிகழ்ச்சி விவரங்கள்

- 27 ஜூன் 2025 – கோயம்புத்தூர் மாவட்டம் : 143 பங்கேற்பாளர்கள் - 18 ஜூலை 2025 – தூத்துக்குடி மாவட்டம் : 70 பங்கேற்பாளர்கள் - 29 ஆகஸ்ட் 2025 – சென்னை மாவட்டம் : 111 பங்கேற்பாளர்கள் - 09 செப்டம்பர் 2025 – சேலம் மாவட்டம் : 107 பங்கேற்பாளர்கள் - 26 செப்டம்பர் 2025 – மதுரை மாவட்டம் : 101 பங்கேற்பாளர்கள் - 10 அக்டோபர் 2025 – வேலூர் மாவட்டம் : 111 பங்கேற்பாளர்கள்

நிகழ்வு புகைப்படங்கள்

image of unknown image
View
image of unknown image
View