image of unknown image

சென்னை - டிசம்பர் 2025

தேதி: 23 December 2025

இடம்: சென்னை

வகை: விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP)


நிகழ்வு பற்றி

விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு(VDP) 23 டிசம்பர் 2025 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது. FaMeTN ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களை இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஆகிய பாரதிய நபிகியா வித்யுத் நிகம் லிமிடெட் (BHAVINI), இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் (AAI), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் இராணுவப் பொறியாளர் சேவைகள் (MES) போன்றவற்றின் விநியோகஸ்தர்களாக உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில், மேற்கண்ட நிறுவனங்களில் விற்பனையாளர் பதிவு செயல்முறை மற்றும் கொள்முதல் தேவைகள் குறித்த தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆராய்ச்சி (Research), விமானப் போக்குவரத்து (Aviation), ரயில்வே (Railways) மற்றும் பாதுகாப்புத் துறை (Defence) போன்ற முக்கிய துறைகளில் MSME-கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி விவரங்கள்

• மொத்த MSME-கள் பங்கேற்பு: 178 • மொத்த PSUs பங்கேற்பு: 05 இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு(VDP), MSME–PSU இணைப்புகளை வலுப்படுத்தி, அந்நிறுவனங்களின் கொள்முதல் செயல்முறைகளில் MSME-கள் அதிக அளவில் பங்கேற்க உதவும் வலுவான தளமாக அமைந்தது.

நிகழ்வு புகைப்படங்கள்

image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View