தேதி: 16 October 2025
இடம்: சென்னை
வகை: விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP)
விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP) 16 அக்டோபர் 2025 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது. FaMeTN ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களை இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஆகிய இந்திய உருக்கு ஆணையம்(SAIL),திண் ஊர்தி தொழிற்சாலை (HVF), கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் (AVNL), மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை(MTC) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(TANGEDCO) போன்றவற்றின் விநியோகஸ்தர்களாக உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.
• மொத்த MSME-கள் பங்கேற்பு: 184 • மொத்த PSUs பங்கேற்பு: 05 இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP), MSME–PSU இணைப்புகளை வலுப்படுத்தி, அந்நிறுவனங்களின் கொள்முதல் செயல்முறைகளில் MSME-கள் அதிகமாக பங்கேற்க உதவும் வலுவான தளமாக அமைந்தது.



