தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (Startup TN)
தமிழ்நாடு பட்டியலின சாதி/பழங்குடியினர் புத்தொழில் நிறுவன நிதி
தமிழ்நாடு பட்டியலின சாதி/ பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு நிதி வசதி கிடைக்காத பிரச்சினையை சமாளிக்க தமிழ்நாடு அரசு உருவாக்கிய முன்னெடுப்பு ஆகும். இந்த நிதியின் நோக்கம், பட்டியலின சாதி / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் தொடங்கும் தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்.
நோக்கம்
தமிழ்நாட்டில் பட்டியலின சாதி / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த நிறுவுநர்கள் தொடக்க நிறுவனங்களை உருவாக்கி நடத்த ஊக்குவிப்பது.
முக்கிய பலன்கள்
பட்டியலின சாதி / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு இந்த நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
தகுதி அளவுகோல்கள்
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நேரத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையின் கீழ் வரையறுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனமாக இருக்க வேண்டும்.
The applicant, at the time of application, should conform to the definition of Startup under the Tamil Nadu Startup and Innovation Policy.
More than 50% of equity of the company/enterprise must belong to one or more founders who belong to the SC/ST community.
The control of the company/enterprise should vest with SC/ST shareholders.
The company/enterprise should be domiciled in Tamil Nadu and its principal base of operation should be Tamil Nadu.
The SC/ST entrepreneur(s) who have applied should be native(s) of Tamil Nadu or of Tamil origin.
Preference will be given if such entrepreneur(s) have their principal base of operations within Tamil Nadu.
நிறுவனம் அல்லது தொழிலில் 50%-க்கும் மேற்பட்ட பங்குகள் பட்டியலின சாதி / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த நிறுவுநர்களிடம் இருக்க வேண்டும்.
நிறுவனத்தின் கட்டுப்பாடு பட்டியலின சாதி / பழங்குடியினர் பங்குதாரர்களிடம் இருக்க வேண்டும்.
நிறுவனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டு அதன் முக்கிய செயல்பாட்டு மையம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பட்டியலின சாதி / பழங்குடியினர் தொழில்முனைவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆக இருக்க வேண்டும்.
இத்தகைய தொழில்முனைவோரின் முக்கிய செயல்பாட்டு மையம் தமிழ்நாட்டில் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.