தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் வசதியாக்கல் அமைப்பு
உள்நாட்டு நிகழ்வுகள் : வணிக வாய்ப்புகளை கண்டறிதல்/ கண்காட்சிகளில் பங்கேற்றல்/பார்வையிடுதல்
உள்நாட்டில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பதற்காக அல்லது பார்வையிடுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணம் மற்றும் தங்குமிட செலவுகளை, கீழ்க்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதி உதவியாகப் பெறலாம்.
FaMeTN Sponsorship Reimbursement-ஐ கோரி, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புத்தாளில் (Letterhead) ஒரு விண்ணப்பக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் பின்வரும் விவரங்கள் இடம்பெற வேண்டும்:
நிறுவனத்தின் சுருக்க அறிமுகம்
தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் பொருட்களின் விவரம்
உரிமையாளரின் பாலினம்
கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஏற்பட்ட மொத்த செலவு
கண்காட்சியில் பங்கேற்ற பிரதிநிதியின் பெயர் மற்றும் பதவி
மேலும், அந்தக் கடிதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவரின் கையொப்பமும் அதிகாரப்பூர்வ முத்திரையும் இருக்க வேண்டும்.
துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான கண்காட்சிகளின் போது, தொடர்புடைய துறையில் செயல்படும் MSME-களுக்கு மட்டுமே நிதி ஆதரவு வழங்கப்படும்.
மேலும்,உள்நாட்டில் விதிக்கப்படும் எந்தவொரு வரி அல்லது சுங்கக் கட்டணங்களும் திருப்பிச் செலுத்துதலுக்காக பரிசீலிக்கப்படமாட்டாது.