தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் வசதியாக்கல் அமைப்பு
பதிவு செய்யப்பட்ட MSME சங்கங்களுக்கு உதவி
MSME துறையின் நலனுக்காக உள்நாட்டில் கண்காட்சிகள் / வர்த்தக விழாக்களை நடத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. குறைந்தது 3 ஆண்டுகள் மற்றும் குறைந்தது 25 MSME நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட MSME சங்கங்கள் நிதி பலன்களைப் பெற தகுதியுடையவையாக இருக்கும். மேலும், இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கான போதுமான அனுபவமும் திறனும் இருப்பதற்கான தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நோக்கம்
MSME துறையின் நலனுக்காக உள்நாட்டில் கண்காட்சிகள் / வர்த்தக விழாக்களை நடத்த பதிவு செய்யப்பட்ட MSME சங்கங்களுக்கு நிதி ஆதரவு வழங்குவது.
முக்கிய பலன்கள்
சென்னையில் நடத்துவதாக இருந்தால், ஒவ்வொரு நிகழ்விற்கும் அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் வரை, 50% மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் பிற அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு, ஒவ்வொரு நிகழ்விற்கும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை, 50% மானியம் வழங்கப்படும்.
பிற மாநிலங்களில் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு, ஒவ்வொரு கண்காட்சிக்கும் அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் வரை, 50% மானியம் வழங்கப்படும்.
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி, திருப்பூர்,ஓசூர்,சேலம்,ஈரோடு,தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு, ஒவ்வொரு நிகழ்விற்கும் அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வரை, 50% மானியம் வழங்கப்படும்.
தகுதி அளவுகோல்கள்
பதிவு செய்யப்பட்ட MSME சங்கங்களுக்கு, ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ஒரு கண்காட்சிக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் செலவுத்திருப்பீடு வழங்கப்படும்.
கண்காட்சி நடத்துவதற்கான செலவுகள் மட்டுமே திருப்பி வழங்கப்படும் ; கருத்தரங்கம் / பயிலரங்கு (Seminar / Workshop) நடத்துவதற்கான செலவுகள் தகுதியற்றவை.
MSME நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த கண்காட்சியில் பங்கேற்றிருக்க வேண்டும்.
கண்காட்சியில் குறைந்தது 25 கண்காட்சி அங்காடிகள் இருக்க வேண்டும்.
கண்காட்சியைப் பற்றிய விளம்பரம் அல்லது செய்திக் குறிப்பை குறைந்தது ஒரு பிரபலமான உள்ளூர் நாளிதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் / மண்டல இணை இயக்குநர்,சென்னை கண்காட்சிக்கு ஆய்விற்காக அழைக்கப்பட வேண்டும்.
பங்கேற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக மட்டுமே கண்காட்சி நடத்தப்பட்டதைக் சம்பந்தப்பட்ட பொது மேலாளர் / மண்டல இணை இயக்குநர்,சென்னை உறுதிப்படுத்த வேண்டும்.