தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர்
முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல் (Reimbursement of Stamp Duty and Registration Charges)
தொழில் நிறுவனம் நிலத்தை வாங்கும் போது செலுத்தப்படும் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத் தாள் கட்டணத்தில் 50% வரை திருப்பிச் செலுத்தும் நிதி உதவி உங்கள் தொழிலுக்கு வழங்கப்படும். இது தொழில் நிறுவனங்களின் முதலீட்டு செலவைக் குறைக்க உதவுகிறது.
நோக்கம்
பின்தங்கிய தொகுதிகளில் (Backward Blocks) முதலீடு செய்யும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை குறைப்பது.
முக்கிய பலன்கள்
தொழில்துறை பயன்பாட்டிற்காக நிலம் வாங்கும்போது செலுத்தப்படும் முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தில் 50% வரை திருப்பிச் செலுத்தப்படும்.
தகுதி அளவுகோல்கள்
விண்ணப்பதாரர் குறு அல்லது சிறு உற்பத்தி தொழில் நிறுவனம் ஆக இருக்க வேண்டும். அந்த நிறுவனம், மாநிலம் அறிவித்த பின்தங்கிய தொகுதிகளில் (Backward Blocks) அமைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலவரம்பு: வர்த்தக உற்பத்தி (Commercial Production) தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.